இணையத்தில் சாதி சான்றிதழ் வழங்க விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம்


இணையத்தில் சாதி சான்றிதழ் வழங்க விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம்
x

குருமலை மலையடிவாரத்தில் இணையத்தில் சாதி சான்றிதழ் வழங்க விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வேலூர்

ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல்மலை, நச்சிமேடு மற்றும் பள்ளக்கொல்லை ஆகிய 4 மலை கிராமங்கள் உள்ளன.

இந்த மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க இணையத்தில் விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் குருமலை மலையடிவாரத்தில் நேற்று நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் சங்கர் தயாளன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தாசில்தார் வேண்டா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் சாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் 75 பேர் மனு அளித்தனர். படிப்பறிவற்ற ஏழை, எளிய மக்கள் சாதி சான்றிதழை இணையத்தில் எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் தவித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் தனது சொந்த செலவில், 2 கம்ப்யூட்டர்களை வரவழைத்து அந்த இடத்திலேயே ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார்.

இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் ஆன்லைன் வழியாக சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து உதவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.


Next Story