மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

விருதுநகர்

சாத்தூர்

சாத்தூர், வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சாத்தூரில் நடைபெற்றது. முகாமிற்கு சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா தலைமை தாங்கினார். சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் சிவகாசி சுகாதார இணை இயக்குனர் கலுசிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, மருத்துவச் சான்று ஆகிய ஆவணங்கள் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு யூ.டி.ஐ.டி. சான்றிதழுக்காக 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Next Story