மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடக்கிறது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவர்கள், யூ.டி.ஐ.டி. எனப்படும் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றவர்கள் அந்த அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story