18 ஊராட்சிகளில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்
திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் 18 ஊராட்சிகளில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதியூர், மாடப்பள்ளி, எலவம்பட்டி, பெரியகண்ணலாப்பட்டி, கதிரிமங்கலம், கதிரம்பட்டி, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகளில் விவசாயிகளுக்கான வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி கலந்து கொண்டார்.
ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு, பண்ணைக்குட்டை, 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட் அமைக்க 650 விவசாயிகள் மனு அளித்தனர் நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி, வேளாண்மை அலுவலர்கள் தாரணி, ஸ்விஸ்திகா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்.மணிமேகலை ஆனந்தகுமார், கோமதி கார்த்திகேயன், சரஸ்வதி ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர்கள் அண்ணாமலை, கோபி, நன்றி கூறினர்.