மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் 148 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 72 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 75 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 108 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், தொழிலதிபர் நல்லசாமி, மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர்கள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story