வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் குறித்து அமைச்சர் காந்தி வேண்டுகோள்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் சரிபார்த்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்கள் நாளை, நாளைமறுநாள் மற்றும் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்காளர்களாக உள்ளவர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என சரிபார்த்துக் கொள்ளலாம்.

எனவே தகவல் தொழில்நுட்ப அணியினர் இப்பணியில் ஈடுபடலாம். மேலும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story