விழுப்புரம் மாவட்டத்தில்வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது


விழுப்புரம் மாவட்டத்தில்வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.

விழுப்புரம்

சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதை கண்டறிவதற்கும் தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவுகள் மேற்கொள்ளவும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 1.8.2022 முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஆதார் எண் இணைப்பு

இந்த சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம்- 6பி பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் எண் இல்லையெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம். இவ்வாய்ப்பை வாக்காளர்கள் தவறாது பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story