மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்
மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
பெரம்பலூர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் நகரியம், கிராமியம், கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர், லெப்பைக்குடிகாடு, குன்னம் உபகோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் வீடு, விவசாயம், குடிசை மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல் சம்பந்தமான சிறப்பு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 13-ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு சம்பந்தமான வருவாய் ஆவணங்கள் மற்றும் ஆதார் எண், செல்போன் எண், மின் இணைப்பு எண் ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story