மின் இணைப்பில் பெயர் மாற்ற சிறப்பு முகாம்


மின் இணைப்பில் பெயர் மாற்ற சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் மின் இணைப்பில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது

திருவாரூர்

திருவாரூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நிதி மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை மந்திரி, மின் வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்களின் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) நடத்த உத்தரவிட்டுள்ளார்.. அதன் படி திருவாரூர் மாவட்ட திருவாரூர் மின்பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் மின் இணைப்பில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் 24-ந் தேதி முதல் நடக்கிறது. இந்த முகாமில் மின்நுகர்வோர்கள் தங்களது பெயர் மாற்ற விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்பித்து உரிய கட்டணம் செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story