மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயனடையும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 5 புகைப்படங்களுடன் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:-
முகாம்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. 21-ந் தேதி தென்காசியிலும், 22-ந் தேதி ஆலங்குளத்திலும், 23-ந் தேதி கீழப்பாவூரிலும், 24-ந் தேதி கடையத்திலும், 25-ந் தேதி செங்கோட்டையிலும், 26-ந் தேதி கடையநல்லூரிலும், 28-ந்் தேதி வாசுதேவநல்லூரிலும், 29-ந் தேதி சங்கரன்கோவிலிலும், 30-ந் தேதி குருவிகுளத்திலும், டிசம்பர் 1-ந்் தேதி மேலநீலிதநல்லூரிலும் முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.