மனுக்கள் மீது தீர்வு காண சிறப்பு முகாம்


மனுக்கள் மீது தீர்வு காண சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 8 April 2023 12:30 AM IST (Updated: 8 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ்நிலையங்களிலும் மனுக்கள் மீது தீர்வு காண சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

தேனி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறப்பட்டுள்ளதாவது:-

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் அறிவுறுத்தலின்பேரில், தேனி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்கள், உட்கோட்ட அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியில் இருந்து பகல் 2.30 மணி வரை புகார் மனு மேளா என்ற பெயரில் சிறப்பு முகாம் நடக்கிறது. அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தங்களது போலீஸ் நிலையம், உட்கோட்டத்தில் முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story