விக்கிரவாண்டியில்பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்


விக்கிரவாண்டியில்பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் தலைமை தாங்கினார்.

பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை, பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காண பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதில் வட்ட வழங்கல் அலுவலர் வேலு, மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் தயாநிதி, இளநிலை உதவியாளர் பிரசாத், வட்ட பொறியாளர் சுரேஷ் உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனர்.


Next Story