தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்


தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
x

அருப்புக்கோட்டையில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய நடைபெற்ற சிறப்பு முகாமில் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய நடைபெற்ற சிறப்பு முகாமில் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவுபடி அருப்புக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் திறன் மேம்பாட்டு துறை மற்றும் அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் சிறப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி ராமலிங்கம் தலைமை தாங்கினார். தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலச்சந்திரன் வரவேற்றார்.

நலத்திட்ட உதவி

தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் ஆவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தகுமார் பேசினார். சட்டப்பணிகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாகவும், அதனடிப்படையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த முகாம் பயனுள்ளதாக இருக்கும் என சார்பு நீதிபதி ராமலிங்கம் பேசினார்.

அதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டையை நீதிபதிகள் வழங்கினர். முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிபதி இருதய ராணி, அருப்புக்கோட்டை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி, திருச்சுழி நீதிபதி அபர்ணா, துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், வக்கீல்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story