வருவாய்த்துறை அலுவலர்களுக்கான சிறப்பு முகாம்
வருவாய்த்துறை அலுவலர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, தளவாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் புகழூர், கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி ஆகிய தாலுகாவைச் சேர்ந்த கரூர் கோட்ட அளவிலான வருவாய்த்துறை அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமுக்கு கரூர் கோட்ட புள்ளியல் துறை உதவி இயக்குனர் காமாட்சி தலைமை தாங்கினார். குளித்தலை கோட்ட புள்ளியல் துறை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு, வேளாண்மை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வழங்கினார். வட்டார புள்ளியியல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் தாசில்தார்கள் மோகன்ராஜ், செந்தில்குமார், ராதிகா, மண்டல துணை தாசில்தார் அன்பழகன் மற்றும் புகழூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், கரூர் ஆகிய 4 தாலுகாவை சேர்ந்த 120 கிராம நிர்வாக அலுவலர்கள், 20 வருவாய் ஆய்வாளர்கள், 4 மண்டல துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.