தராசு எடை கற்களுக்கு முத்திரையிட சிறப்பு முகாம்
பணகுடியில் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தராசு எடை கற்களுக்கு முத்திரையிட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பணகுடி:
வள்ளியூர் முத்திரை ஆய்வாளர் (எடையளவு) அனுராதா போஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் உத்தரவின்பேரில், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுரையின்பேரில், ராதாபுரம் தாலுகா பணகுடி முத்தாரம்மன் கோவில் தெருவில் உள்ள பணகுடி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தராசு எடை கற்களுக்கு முத்திரையிட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் வியாபார பயன்பாட்டில் உள்ள தராசுகள், எடைகள் மற்றும் அளவைகளை மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முத்திரை முகாமில் e-SHRM வலைதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதால் 16 முதல் 56 வயதிற்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.