60 ஊராட்சிகளில் சிறப்பு முகாம்


60 ஊராட்சிகளில் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 3:04 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிறப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2022-23-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 60 கிராம ஊராட்சிகளிலும் இன்று(வியாழக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள 13 ஊராட்சிகள், குத்தாலம் வட்டாரத்தில் உள்ள 13 ஊராட்சிகள், சீர்காழி வட்டாரத்திலுள்ள 9 ஊராட்சிகள், கொள்ளிடம் வட்டாரத்தில் 11 ஊராட்சிகள், செம்பனார்கோவில் வட்டாரத்தில் 16 ஊராட்சிகள் என மாவட்டத்தில் உள்ள 60 ஊராட்சிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது.

பட்டா மாறுதல் செய்தல்

முகாமில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும் வருவாய்த்துறை மூலம் பட்டா மாறுதல் செய்தல், குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளிடம் விண்ணப்பம் பெறுதல், கிசான் கடன் அட்டை விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு செய்யும் விவரம் தெரிவித்தல் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை சிகிச்சை முகாம் நடத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்ட கலெக்டர் லலிதா ஆலோசனையின் பேரில் நடைபெறும் இந்த முகாம்களில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் ஒருசேர பங்கேற்பதால், விவசாயிகள் தங்களுக்குரிய தேவைகளை தெரிவித்தால் அந்த கோரிக்கைக்கு உடனடி தீர்வு ஏற்படும். எனவே இந்த முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story