காசநோய் கண்டறிதல் குறித்த சிறப்பு முகாம்


காசநோய் கண்டறிதல் குறித்த சிறப்பு முகாம்
x

காசநோய் கண்டறிதல் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

கரூர்

நன்செய் புகழூர் ஊராட்சிக்குட்பட்ட தவுட்டுப்பாளையம் ஈ.வே.ரா. மண்டபம் அருகே சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிதல் குறித்த எக்ஸ்ரே பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நுரையீரலில் சளி தொற்று, காச நோய் எதுவும் உள்ளதா? என்று எக்ஸ்ரே மூலம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு காசநோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டன.

பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை செய்து, உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.


Next Story