மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்


மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்
x

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது.

கரூர்

நொய்யல், புன்னம் சத்திரம், புகழூர் பகுதிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வீடு, கைத்தறி, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீடு மின் இணைப்புகளுக்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் மின் இணைப்பு எண் ரசீது, ஆதார் நகல், போன்றவற்றை கொண்டு வந்து பதிவு செய்வதற்காக முகாம் அலுவலர்களிடம் கொடுத்தனர்.

அதேபோல் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்யாத உரிமையாளர்களும் பெயர் மாற்றத்திற்காக ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்தனர். மின் இணைப்பு இணைக்கப்பட்ட செல்போனில் வரும் குறுந்தகவல்களை தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் செல்போன்களை கொண்டு வந்து ஓ.டி.பி. எண்ணை தெரிவித்து பதிவு செய்து கொண்டனர்.


Next Story