மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்


மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
x

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் க.அருள்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருப்பத்தூர் கோட்டத்துக்குட்பட்ட மின்இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம் ஆரிப் நகர், நூர் மசூதி அருகில், தண்டபாணி கோவில், சின்னகடை தெருவில் உள்ள வேணுகோபால் சாமி கோவில், அவுசிங் போர்டு பிரிவு-1 அச்சமங்கலம் ஊராட்சி, பால்னாங்குப்பம் ஊராட்சி, மான்கானூர் பள்ளிக்கூடம் அருகில், நார்சாம்பட்டி, கும்டிகாம்பட்டி, ஏ.கே.மோட்டூர், அத்திக்குப்பம், ஏ.ஜி. வலசை, மாம்பாக்கம் மகனூர்பட்டி, எக்கூர் சிங்காரப்பேட்டை, பரவக்கல் அகரம், ஜோன்றம்பள்ளி, பள்ளத்தூர், மூலக்காடு, புதூர்நாடு ஆண்டியப்பனூர், லாலாபேட்டை, அக்ராகரம், பந்தாரப்பள்ளி, மல்லப்பள்ளி, வெலக்கல்நத்தம், சந்திரபுரம், பாச்சல், சின்னமூக்கனூர், எலவம்பட்டி, பெரியகரம், கொண்டப்பநாயக்கன்பட்டி, மானவல்லி, சுந்தரம்பள்ளி, நத்தம், புதுப்பட்டி. ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story