மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்
பொறையாறு, திருக்கடையூர் பகுதிகளில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது
பொறையாறு:
செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
செம்பனார்கோவில் உபகோட்டம் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான் மற்றும் பூம்புகார் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெறுகிறது. இன்று பொறையாறு புதிய பஸ் நிலையம், சமுதாயக்கூடம், திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகம், பரசலூர் ஊராட்சி மன்ற அலுவலகம், ஆக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம், நடுக்கரை ஊராட்சி மன்ற அலுவலகம், தருமகுளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிர்ப்புறம் ஆகிய இடங்களில்முகாம் நடக்கிறது. இந்த முகாமை மின் நுகர்வோர்கள் பயன்படுத்தி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.