நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு முகாம் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி மாவட்ட போலீஸ் துறை மற்றும் ஆலத்தூர் வட்ட வருவாய்த்துறை சார்பில் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துகுமார், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணாவதி மற்றும் போலீஸ் ஏட்டுகள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மொத்தம் 11 மனுக்கள் பெறப்பட்டு 10 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story