தச்சநல்லூரில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு மையம்
தச்சநல்லூரில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது தச்சநல்லூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை நேற்று காலை நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி திறந்து வைத்தார். இதில் செயற்பொறியாளர் முத்துகுட்டி, உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி மின் பொறியாளர்கள் சரவணகுமார், சரவணன், அருணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story