சிறப்பு தூய்மை திட்டப்பணிகள்


சிறப்பு தூய்மை திட்டப்பணிகள்
x

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் சிறப்பு தூய்மை திட்டப்பணிகள் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு தூய்மை திட்டப் பணிகள் நடந்தது.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்தும் மீண்டும் மஞ்சப்பையை ஊக்குவிக்கும் வகையில், குப்பையை தரம் பிரித்து கொடுப்பது குறித்து தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் வீடுகள் மற்றும் கடைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

முன்னதாக இப்பணிகளை பேரூராட்சி தலைவர் கோ.சரவணன் தொடங்கி வைத்தார்.

இதில் செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story