அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு கல்வி கடன் முகாம்


அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு கல்வி கடன் முகாம்
x

மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்


மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

கல்வி கடன்முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது.

வருகிற 21-ந் தேதி அன்று நடைபெறும் முகாமில் சாத்தூர் வட்டார மாணவர்கள் சாத்தூர் எஸ்.ஆர். எம். கல்லூரியிலும், வெம்பக்கோட்டை பகுதி மாணவர்கள் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை பகுதி மாணவர்கள் ஸ்ரீ சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரியிலும், ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர்கள் ராம்கோ கல்லூரியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மாணவர்கள் ஸ்ரீ பாலகிருஷ்ணா கலைக்கல்லூரியிலும், வத்திராயிருப்பு வட்டாரமாணவர்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், காரியாபட்டி பகுதி மாணவர்கள் சேது என்ஜினீயரிங் கல்லூரியிலும் பங்கேற்று பயன்பெறலாம்.

இணையதளம்

நரிக்குடி மற்றும் திருச்சுழி பகுதி மாணவர்கள் திருச்சுழி யூனியன் அலுவலகத்திலும், விருதுநகர் பகுதி மாணவர்கள் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியிலும் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

சிவகாசியில் 22-ந் தேதி நடைபெறும் முகாமில் சிவகாசியை சேர்ந்த மாணவர்கள் எஸ்.எப்.ஆர். கல்லூரியிலும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேவைப்படும் ஆவணங்கள்

முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் கடன்ஆணைகள் வழங்கப்படும். மாணவர்கள் விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகளின் பெற்றோரின் 3 புதிய புகைப்படம், வங்கி ஜாயிண்ட் அக்கவுண்ட் பாஸ்புக் நகல், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதி சான்று, ஆதார், பான் கார்டு ஆகியவற்றின் நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ், கல்வி கட்டணம் விவரம், பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.


Related Tags :
Next Story