ஆர்.ஆர்.பி தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்..!


ஆர்.ஆர்.பி தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்..!
x

ஆர்.ஆர்.பி தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை:

ஆர்.ஆர்.பி. தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆர்.ஆர்.பி. தேர்வு எழுதுபவர்களுக்காக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கம்.

  • திருநெல்வேலி-பெங்களூரு (வண்டி எண்: 06046) இடையே வருகிற 13-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11 மணிக்கும், மறுமார்க்கமாக பெங்களூரு- திருநெல்வேலி (06045) இடையே வருகிற 17-ந்தேதி பெங்களூரில் இருந்து மாலை 6:30 மணிக்கும் சிறப்பு ஆர்.ஆர்.பி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

  • தூத்துக்குடி-கர்னூல் (06047) இடையே வருகிற 13-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக கர்னூல்-தூத்துக்குடி(06048) இடையே வருகிற 17-ந்தேதி கர்னூலில் இருந்து இரவு 7.30 மணிக்கும் சிறப்பு ஆர்.ஆர்.பி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

  • கொல்லம்-திருச்சி (06056) இடையே வருகிற 13-ந்தேதி கொல்லத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கும், மறுமார்க்கமாக திருச்சி-கொல்லம் (06055) இடையே வருகிற 17-ந்தேதி திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கும் சிறப்பு ஆர்.ஆர்.பி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

  • திருப்பதி-சேலம் (07675) இடையே சிறப்பு ஆர்.ஆர்.பி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (சனிக்கிழமை) திருப்பதியில் இருந்து காலை 6.45 மணிக்கும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கும், மறுமார்க்கமாக சேலம்-திருப்பதி (07676) இடையே இன்று சேலத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கும், 13-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கும் சிறப்பு ஆர்.ஆர்.பி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story