மைசூரு-தூத்துக்குடி இடையே கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மைசூரு-தூத்துக்குடி இடையே கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

மைசூரு-தூத்துக்குடி இடையே கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கீழ்கண்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளை தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மைசூரு-மயிலாடுதுறை(வண்டி எண்: 06251) இடையே இரவு 11.45 மணிக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற நவம்பர் மாதம் 4, 11, 18-ந்தேதிகளில் இயக்கப்படும்.

மறுமார்க்கமாக மயிலாடுதுறை-மைசூரு(06252) இடையே மாலை 6.45 மணிக்கு சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இன்று(சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 5, 12, 19-ந்தேதிகளில் இயக்கப்படும்.

மைசூரு-தூத்துக்குடி(வண்டி எண்: 06253) இடையே மதியம் 12.05 மணிக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற நவம்பர் மாதம் 4, 11, 18-ந்தேதிகளில் இயக்கப்படும்.

மறுமார்க்கமாக தூத்துக்குடி-மைசூரு(06254) இடையே மதியம் 3 மணிக்கு சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் 5, 12, 19-ந்தேதிகளில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story