தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரெயில் 3 நாட்கள் இயக்கம்...!
தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரெயில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி,
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மைசூரு- தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு கட்டண ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது. அதன்படி மைசூர் - தூத்துக்குடி சிறப்பு கட்டண ரெயில் வருகிற 4, 11 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரெயில் (06254) நவம்பர் 5, 12, 19 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூர் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.