கும்பகோணம் மாநகராட்சியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்


கும்பகோணம் மாநகராட்சியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
x

கும்பகோணம் மாநகராட்சியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர்

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. அதன்படி கும்பகோணம் மாநகராட்சி சார்பில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 6 சிறப்பு முகாமில் 280 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்த 6 பேரின் ரத்தமாதிரி ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. நேற்று காலை சிவகுருநாதன் தெரு, செம்போடை பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், 133 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 2 பேரின் ரத்தமாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. முகாமில் கும்பகோணம் மாநகர நல அலுவலர் பிரேமா தலைமையில் டாக்டர்கள் இந்துமதி, தங்கரத்தினம், சுகன்யா மற்றும் சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Related Tags :
Next Story