1,116 குழந்தைகளுக்கு சிறப்பு உணவு


1,116 குழந்தைகளுக்கு சிறப்பு உணவு
x
தினத்தந்தி 28 April 2023 12:30 AM IST (Updated: 28 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,116 குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் எதிர்கால சந்ததிகளான குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், 6 மாதத்துக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களின் நலனை கருத்தில்கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தொடங்கி வைத்தார். திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு 8 வாரங்கள் வரை சிறப்பு உணவு, அரைத்த வேர்க்கடலை பால் பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 1,116 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் 6 மாதங்களுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படும். அதன்படி மாவட்டத்தில் 553 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story