16 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்


16 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 12 March 2023 12:30 AM IST (Updated: 12 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர்

திருவையாறு:

திருவையாறை அடுத்த வைத்தியநாதன்பேட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் சம்மந்தம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சூரியராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்து சமூக தணிக்கை ஆடிட்டர் செந்தில்குமார் தணிக்கை செய்து அறிக்கைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) கீதா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் அய்யப்பன் நன்றி கூறினார். இதேபோல் திருவையாறு ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


Next Story