மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்


மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

குறைதீர்வு முகாம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று நடந்தது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் (பொது) தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக வழங்கினர்.

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்டர்கள் வழங்கும் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. பிறவி ஊனம் கொண்டவர்களுக்கு சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லத்தக்கதாக அமைகிறது.

மீண்டும் சான்று பெற நாங்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே ஊனம் தொடர்பாக வழங்கப்படும் சான்று நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றனர்.

சிகிச்சை பிரிவுகள்

மேலும் மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள மனுவில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை, தோல் மற்றும் மனநல மருத்துவம் முதல் தளத்தில் சென்று பெற வேண்டி உள்ளது.

சாதாரண மக்கள் அங்கு சென்று சிகிச்சை பெறலாம். ஆனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே அங்கு இந்த சிகிச்சை பிரிவுகளை தரைதளத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது மின்தூக்கி அமைத்து தர வேண்டும்.

முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் கொடுக்கப்படுகிற செயற்கை கை, கால்கள் தனியார்மயமாக்கியதால் சேவை குறைபாடுகள் உள்ளது.

எனவே அரசு மருத்துவமனையில் எளிய முறையில் இத்திட்டம் செயல்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெறப்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story