மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 93 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து காதொலி கருவி வேண்டி பெறப்பட்ட 6 மனுதாரர்களுக்கு இக்கூட்டத்திலேயே உடனடியாக ரூ.24 ஆயிரம் மதிப்பீட்டில் காதொலி கருவிகள் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என நலத்திட்டங்களை கலெக்டர் வழங்கினார்.