மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
கடலாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏதுவாக அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. அதன்படி வருகிற 22-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு சப்-கலெக்டர் தலைமையில் கடலாடி தாலுகா அலுவலகத்திலும், 30-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. ஒற்றைச்சாளரமுறையில் நடைபெறும் இம்முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதால், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.