இரவு ரோந்து போலீசாருக்கு சிறப்பு ஊக்கத்தொகை - டி.ஜி.பி.சைலேந்திரபாபு
இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு ஊக்கத்தொகை என டி.ஜி.பி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தொடங்கி வைத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்த ஆண்டில் காவல் உதவி ஆய்வார்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை விடுமுறை வழக்கவும், இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொவை வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில், சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story