சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு தகவல் மையம்


சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு தகவல் மையம்
x
தினத்தந்தி 17 May 2023 3:30 AM IST (Updated: 17 May 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் அவர்கள் வசதிக்காக சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் அவர்கள் வசதிக்காக சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டு உள்ளது.

மலர் கண்காட்சி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு ஊட்டியை கண்டறிந்தார். பின்னர் தனது அயராத முயற்சியால் 1822-ம் ஆண்டு ஊட்டியை உருவாக்கி வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இந்தநிலையில் ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. கோடை விழாவையொட்டி வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

சிறப்பு தகவல் மையம்

ஊட்டி ரோஜா பூங்காவில் நடந்த ரோஜா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கோடை சீசனையொட்டி நீலகிரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் தங்கும் விடுதிகளில் அறைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தங்க அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். சிலர் சாலையோரம் மற்றும் பஸ் நிலையத்தில் தங்கினர். மேலும் சிலர் வாகனங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்தநிலையில் ஊட்டி 200-வது ஆண்டு விழா, கோடை விழாவை முன்னிட்டு நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஊட்டி வெண்லாக் சாலையில் சிறப்பு தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சிறப்பு தகவல் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வருகிற 31-ந் தேதி வரை செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் காலியறைகள், புதிதாக அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள், வாகனங்கள் திருப்பி விடப்படும் வழித்தட விவரம் உள்பட பல்வேறு விவரங்களை கொண்ட தகவல் மையத்தை நேரிலோ அல்லது 0423-2443977, 8122643533 என்ற எண்களை தொடர்பு கொண்டு பெறலாம் என்றனர்.


Next Story