சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் வளாகத்தில் நேற்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவ பரிசோதனைகளுடன், காது, மூக்கு, தொண்டை, கண் பரிசோதனை, பல் மருத்துவம், எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவம், நெஞ்சக நோய்க்கான கதிரியக்க பரிசோதனை மற்றும் இசிஜி பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில் கைத்தறி துறை உதவி இயக்குனர் வெற்றிவேல் மற்றும் பல்துறை சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story