சிறப்பு மருத்துவ முகாம்
ஆலங்குளம் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்தபாஞ்சான் பஞ்சாயத்து காளாத்திமடம் கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. காலாத்திமடம் இந்து தொடக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு மருதம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பழராம்ஜி தலைமை தாங்கினார். தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மருத்துவ முகாமில் 480 ஆண்கள், 565 பெண்கள் உள்பட மொத்தம் 1,045 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவ அட்டை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story