சிறப்பு மருத்துவ முகாம்
பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சிவகாசி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை யூனியன் தலைவர் முத்துலட்சுமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், மகளிர் திட்ட இணை இயக்குனர் தெய்வேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் வைரக்குமார், சிவகாசி மருத்துவ மாவட்ட துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி, யூனியன் கவுன்சிலர்கள் ஜி.பி. முருகன், விஸ்வை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு வகையான ஆய்வக பரிசோதனைகளும் செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை இசக்கியப்பன், பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.