சிறப்பு மருத்துவ முகாம்
குளத்தூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள்ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜரமணி தாகப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து டாக்டர்கள் முத்துக்குமரன், புவனேஸ்வரன், பிருந்தா, பிரபு ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் 114 பேருக்கு ஸ்கேன், 40 பேருக்கு இ.சி.ஜி., 612 பேருக்கு சா்க்கரை, 20 பேருக்கு தொழுநோய், 122 பேருக்கு கண் பரிசோதனையும், 52 பேருக்கு பல் மற்றும் 192 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில் அ்.பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன், கவுன்சிலர்கள் அம்பிகாவீரமணி, தனவேல்பொன்னி, தி.மு.க மாவட்ட இளைஞரணி ஆறு.கதிரவன், ஊராட்சி மன்ற துணைதலைவர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.