சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம் 27 ந்தேதி நடக்கிறது.
கரூர்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள ஈக்வெடாஸ் குருக்குல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய்புற்று நோய் கண்டறியும் பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம் போன்ற பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story