அம்பையில் சிறப்பு மருத்துவ முகாம்


அம்பையில் சிறப்பு மருத்துவ முகாம்
x

அம்பையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது

திருநெல்வேலி

அம்பை:

அம்பை நகராட்சியும், நெல்லை கேன்சர் கேர் சென்டரும் இணைந்து புற்றுநோய் தடுப்பு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியது. நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைவர் கே.கே.சி. பிரபாகரன் தலைமை தாங்கினார். நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் வரவேற்றார். நெல்லையை சேர்ந்த டாக்டர் அபிராமி தலைமையிலான மருத்துவ குழுவினர் நகராட்சி சுகாதார நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.


Next Story