உமரிக்காடு அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்


உமரிக்காடு அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
x

உமரிக்காடு அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

உமரிக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். உமரிக்காடு ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட கூட்டமைப்பு தலைவருமான எஸ்.ராஜேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு மருத்துவர்கள் ரேஷ்மா, சிவ நந்தினி, சுகன்யா, தோல் மருத்துவர் மும்மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் லட்சுமணன் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது, ஊட்டச்சத்து கண்காட்சி, டெங்கு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.


Next Story