கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கரூர்

தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சி வினோபாஜிபுரத்தில் கால் நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்றனர். இதில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.


Next Story