பெண் போலீசாருக்கு புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்


பெண் போலீசாருக்கு புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்
x

பெண் போலீசாருக்கு புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின் பேரில் பெண் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெண் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் உடல் பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை செய்தனர். முகாமில் 76 பெண் போலீசாரும், 71 போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் என மொத்தம் 147 பேர் பயனடைந்தனர்.


Next Story