கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கால்நடைத்துறை மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், செல்ல பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கோத்தகிரி காந்தி மைதான புயல் நிவாரண கூடத்தில் நேற்று நடைபெற்றது. முகாமை குன்னூர் கால்நடை மருந்தக உதவி இயக்குநர் டாக்டர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார். கோத்தகிரி கால்நடை டாக்டர் ராஜன், ஈளாடா கால்நடை டாக்டர் ரேவதி, கேர்கம்பை கால்நடை டாக்டர் பவித்ரா, தெங்குமரஹாடா கால்நடை டாக்டர் அபிலாஷ் ஆகியோர் வளர்ப்பு நாய்கள், பூனைகள் மற்றும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் அதன் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் கால்நடைகளுக்கான மருந்து வழங்கப்பட்டது. வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயனடைந்தனர். தொடர்ந்து கூடலூரில் முகாம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story