மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை
மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உதவி உபகரணங்களின் மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பூமிநாதன் எம்.எ.ல்.ஏ. தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். தகுதி உள்ளவர்களுக்கு உடனடியாக பஸ் பாஸ், உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் வழங்கப்பட்டது. ஏராளமானவர்களுக்கு உபகரணங்கள், கல்வி கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story