ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x

ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். முகாமிற்கு ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லதாகண்ணன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன், தலைமையிலான வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், மருத்துவம் சாரா சுகாதார மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் (நிர்வாகம்) நன்றி கூறினார்.


Next Story