கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x

கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மானம்புச்சாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில் 73 கர்ப்பிணிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கான ரத்தசோகை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளின் முக்கியத்துவம் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த நிறமியின் அளவு 7 கிராமம் முதல் 9.9 கிராம் வரை இருக்கும் ரத்தசோகை உள்ள கர்ப்பிணிகளுக்கு அயர்ன் சுக்ரோஸ் ஊசி 20 வாரங்களுக்கு பிறகு 2 நாட்கள் இடைவெளியில் 4 ஊசிகள் செலுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தின் 4-வது மாதத்தில் குடல்புழு நீக்கி மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. மேலும் 4-வது மாதம் முதல் கர்ப்பக்காலத்தில் இரும்புச்சத்து மாத்திரைகள் 100 வழங்கப்படுகிறது. இவற்றுடன் பேரிச்சம்பழம், வெல்லம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் ரத்தசோகையை தடுத்து தாய், சேய் நலம் காக்க முடியும் என்றனர். முகாமில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story