தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
ஆலங்காயத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறப்பள்ளி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிகிச்சை பெற்றனர்.
மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வளார்கள், பேரூராட்சி பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story