நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x

நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது

விருதுநகர்


மாவட்டத்தில் கைத்தறி துறையின் கீழ் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இந்த சங்கங்கள் மூலமாக 6 ஆயிரம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் அருப்புக்கோட்டையில் உள்ள முழு தேங்காய் பாலிதார் திருமண மண்டபத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம் மாவட்ட மருத்துவ துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக பொது மருத்துவம், பல் மருத்துவம், இருதய நோய் மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மருத்துவ முகாமில் கலந்து கொண்டு நெசவாளர்கள் பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story